ராடான் குறும் பட விழா

Published By: Robert

02 Dec, 2015 | 09:58 AM
image

திரை உலகில் மட்டுமின்றி சின்ன திரையிலும் அன்றும் இன்றும் கொடி கட்டி பறக்கும் ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் ராதிகா தனது தாயின் சுவடுகளில் நடந்து திரை வர்த்தகத்தில் ஈடுப்படுவது இயற்கையானது தான். இன்றியமையாததும் தான். 

பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்த இவருக்கு விளையாட்டு மேலாண்மை துறையில் உள்ள ஆர்வத்தால் அந்த துறையிலே இங்கிலாந்து நாட்டில் உயர் பட்டம் பெற்றார். புலிக்கு பிறந்தது பூனையாக இருக்காது என்றக்கூற்றுக்கு ஏற்ப, இவரும் தற்போது தனது தாயின் வழியிலே ஊடக துறையில் கால்பதிக்க வருகிறார். 

New media division என்ற ஒரு நிறுவனத்தை ராடன் டி வியின் உட்பிரிவாக தொடங்கி அதன் மூலம் பல்வேறு youtube சானல்களை நிர்வாகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருக்கிறார். பல்வேறு  கலை நிகழ்சிகளும், ரியாலிட்டி shows ஆகியவை இந்தப் பிரிவின் கீழ் இயங்கும். பெரிதும் போற்றப்பட்ட எண்பதுகளின் நடிகர்களின் சங்கமம் இவரது சீரிய பொறுப்பில் தான் இயங்கியது. இவர் தற்போது தமிழ் திரை உலகிற்கு பல்வேறு திறமையான கலைஞர்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் ராடான் குறும்பட விழா  ஒன்றை நடத்த இருக்கிறார். 

திரை உலகில் தங்களது திறமையை வெளிபடுத்த வேண்டும் என்று இளைஞர்களின் கனவை நிறைவேற்ற இந்தப் போட்டி நிச்சயம் உறுதுணையாக இருக்கும். எங்களது நிறுவனத்தில் திறமையான இளைஞர்களுக்கு என்றுமே சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு என்பதை நிரூபிக்கும் நோக்கமே இந்த குறும் பட விழா. 

இயக்குனர்கள் பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ், படதொகுபாளர் இயக்குனர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேல், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் நடுவர்களாக இருந்து, போட்டியில் கலந்துகொள்ளும் சிறந்த குறும் படத்தை தேர்வு செய்வார்கள். டிசம்பர் 20 ஆம் திகதி, போட்டியில் கலந்துக் கொள்ள படங்களை அனுப்பும் கடைசி திகதியாகும். பிப்ரவரி மாதம் 11ஆம் திகதி இறுதி சுற்று நடக்கும். இதில் வெற்றி பெறுவர்களுக்கு பரிசும், அவர்களது படைப்புக்கேற்ப பெரிய கௌரவமும் அங்கீகாரமும் தரப்படும். இது அவர்களது கலை பயணத்தில் பெரிதும் உதவும் என சாதிக்க போகும் நம்பிக்கையுடன் கூறினார் ரயான்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிமாறன் - விமல் - போஸ்...

2024-06-20 17:03:37
news-image

மலையாள ரசிகர்களையும் கவர்ந்த 'மகாராஜா'

2024-06-20 16:44:29
news-image

நடிகர் நவீன் சந்திரா நடிக்கும் 'லெவன்'...

2024-06-20 16:35:10
news-image

பிரபுதேவா நடிக்கும் 'மூன் வாக்' பட...

2024-06-19 20:12:40
news-image

அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த தெருக்கூத்து

2024-06-19 20:18:52
news-image

நடிகர் பரத் வெளியிட்ட காளி வெங்கட்டின்...

2024-06-18 17:16:20
news-image

நடிகை ஹனி ரோஸ் கவர்ச்சியில் கலக்கும்...

2024-06-18 17:21:15
news-image

சொல்லி அடிக்கும் பிரபாஸ் - தில்ஜித்...

2024-06-18 17:22:48
news-image

இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகிறது 'புஷ்பா...

2024-06-18 15:04:32
news-image

புதுமுக நடிகர் விஷ்வந்த் நடிக்கும் 'ராக்கெட்...

2024-06-18 14:46:04
news-image

ஜீ - 5 தளத்தில் வெளியாகி...

2024-06-17 17:30:35
news-image

'பீனிக்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகும் நட்சத்திர...

2024-06-17 16:43:04