பதுளைப் பகுதியில் ஒன்பது வீடுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட பெண் ஒருவரை பதுளைப் பொலிஸார் இன்று  கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் மேற்குறிப்பிட்ட வீடுகளிலிருந்து பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதிமிக்க தங்க நகைகளும் பெருமளவிலான ரொக்கப் பணத்தையும் திருடியுள்ளமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட பொருட்களின் அளவும் பெறுமதியும் எவ்வளவு என்பது குறித்து தற்போது மதிப்பீடுகள் செய்யப்பட்டு வருவதா கைது செய்யப்பட்ட பெண் விசாரணையின் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென பொலிசார் தெரிவித்தனர்.

பதுளைப் பகுதியில் ஒன்பது வீடுகளிலேயேவ் மேற்படி திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. வீட்டு உமையாளர்கள் வீட்டில் இல்லாத போது பூட்டுக்கள் மற்றும் யன்னல்கள் உடைக்கப்பட்டு உட்புகுந்து இத் திருட்டை மேற்கொள்ளப்பட்டிருப்பமை ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இத்திருட்டுக்கள் குறித்து பதுளைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களைய  பொலிசார் குறிப்பிட்ட  பெண்ணைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து திருடப்பட்ட பொருட்களின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.