தொழிலாளர்கள் உரிமைகளை குறைப்பதற்காக புதிய சட்டமொன்றை கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுவதாக சிலர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

தொழிலாளர் சட்டம் தொடர்பில் புதிய சட்டம் தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மூலம் தொழிலாளர்களின் உரிமையை குறைப்பதற்கு அல்ல என்றும் தொழிலாளர் சட்டத்தை மிகவும் தளர்வுப்பட்ட வகையில் முன்னெடுப்பதற்கும் உரிமைகளை உறுதிசெய்வதற்கே ஆகுமென தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், உத்தேச புதிய சட்டம் தொடர்பில் கொழும்பில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற
ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது சிசிர ஜெயகொடி தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக தொழில் அமைச்சு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளமையும் முக்கிய விடயமாகும். 

நிரந்தர ஊழியர்களுக்கு பதிலாக ஒப்பந்த அடிப்படையில் அல்லது தற்காலிக அடிப்படையில் ஊழியர்களை சேவையில் ஈடுப்படுத்துவதற்கு இந்த புதிய சட்டத்தின் மூலம் வசதிகள் செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.