ஐ.நா. தூதுவருடன் வழக்குகள் குறித்து பேச நீதிபதிகளுக்கு அழைப்பு விடுப்பதா? - சபையில் சர்ச்சை 

Published By: Priyatharshan

24 Jul, 2019 | 10:50 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­பட்­டு­வரும் 3 வழக்­குகள் தொடர்பில் இலங்கை வந்­துள்ள  ஐக்­கிய நாடு கள் விசேட தூது­வ­ருடன் சந்­திப்பை நடத்த வரு­மாறு  நீதி­ப­தி­க­ளுக்கு  வெளிவி­வ­கார அமைச்சின் பதில் செய­லாளர் அழைப்பு விடுத்த கடி தம் ஒன்று தொடர்பில் சபையில்   சர்ச்சை ஏற்­பட்­டது. 

இந்­நி­லையில் இந்தச் சந்­திப்பை  நிறுத்த தான் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக  சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய சபையில்  தெரி­வித்தார்.   

பாரா­ளு­மன்றம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சபா­நா­யகர் கரு­ ஜ­ய­சூ­ரிய  தலை­மையில் கூடி­யது. பிர­தான நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்ற பின்னர், எதிர்க்­கட்சி உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன விசேட கூற்­றொன்றை முன்­வைத்து தெரி­விக்­கையில், 

நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களில் தலை­யி­டு­வது நீதி­ய­ர­சர்­களை பல­வந்­தப்­ப­டுத்­து­வது அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணாகும். ஆனால் வெளி­வி­வ­கார அமைச்சின் மேல­திக பதில் செய­லாளர் அஹமத் ஏ. ஜவாதின் கையெ­ழுத்தில் அனுப்­பப்­பட்­டுள்ள கடி­தத்தில், எமது நீதி­மன்­றங்­களில் தற்­போது இடம்­பெற்­று­வரும் வழக்­குகள் சில­வற்றின் தற்­போ­தைய நிலை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் விசேட தூது­வ­ருக்கு விளக்கம் தெரி­விக்க வரு­மாறு தெரி­வித்து கடி­தத்தின் பிர­திகள் பிர­த­ம­ரம நீதி­ய­ரசர், நீதி அமைச்சர் மற்றும் கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­ய­ரசர் ஆகி­யோ­ருக்கு அனுப்­பப்­பட்­டி­ருக்­கின்­றது.

இவ்­வாறு நீதி­மன்ற வழக்­குகள் தொடர்பில் வெளி­நாட்டு பிர­ஜை­க­ளுடன் கருத்து பரி­மாற்­றிக்­கொள்ள நீதி­ப­தி­க­ளுக்கு அழைப்பு விடுப்­ப­தா­னது எமது நீதி­மன்ற சுயா­தீ­னத்­தன்­மைக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாகும். அதனால் இதனை தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றார்.

இதன்­போது எழுந்த எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் தெரி­விக்­கையில், குறித்த கடி­தத்தில் 3 வழக்­குகள் குறிப்­பி­டப்­பட்டு மற்றும் சில என தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அதில் ரொஷான் சானக்க கொலை வழக்கு, ரத்­து­பஸ்­வல சம்­பவம் தொடர்­பான வழக்கு மற்றும் வெளிக்­கடை சிறைச்­சா­லையில் இடம்­பெற்ற படு­கொலை தொடர்­பான வழக்கு ஆகி­யவை தொடர்­பா­கவே கலந்­து­ரை­யா­டப்­ப­டு­கின்­றது.

 இந்த சந்­திப்பு இன்று(நேற்று) மாலை 3 மணிக்கு இடம்­பெற இருக்­கின்­றது. அதனால் இதில் தலை­யிட்டு இவ்­வா­றான கலந்­து­ரை­யாடல் இடம்­பெ­று­வதை தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றார்.

இதன்­போது எழுந்த விஜே­தாச ராஜபக்ஷ் தெரி­விக்­கையில், 

இந்த செயற்­பா­டா­னது நீதி­மன்­றத்தை அவ­ம­திக்கும் குற்­ற­மாகும். அதனால் இந்த விட­யத்­துக்கு அமைச்­சர்­களோ செய­லா­ளர்­களோ வச­தி­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கு­மாக இருந்தால் அவர்­களை நீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றத்­துக்­காக நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­செல்ல வேண்­டிய நிலை ஏற்­படும் என்றார்.

அத­னைத்­தொ­டர்ந்து விமல் வீர­வன்ச தெரி­விக்­கையில், வெளி­வி­வ­கார அமைச்சின் மேல­திக செய­லாளர், அவ­ருக்கு இல்­லாத அதி­கா­ரத்தை பிர­யோ­கித்தே இந்த கடி­தத்தை அனுப்பி இருக்­கின்றார். நீதி­மன்ற வழக்கு விசா­ரணை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் விசேட தூது­வ­ருக்கு கருத்து தெரி­விக்­கு­மாறு சட்­டமா அதிபர் உட்­பட மற்­ற­வர்­க­ளுக்கு கட்­ட­ளை­யிட இந்த நபருக்கு  அதிகாரம் வழங்கியது யார்.

அதனால் இந்த நபரை பாராளுமன்றத்துக்கு அழைத்து இதுதொடர்பில் அவரிடம் கேள்வி கேட்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இறுதியில் சபாநாயகர், இந்த சந்திப்பை இடைநிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08