(செ.தேன்­மொழி)


உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று கத்­தோ­லிக்க மக்­க­ளுக்கு எதி­ராக இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை தாக்­குதல் குறித்து மிகவும் வேத­னைப்­ப­டு­கின்றோம். சம்­ப­வத்தின்  பின்னர் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி செய்ய கூடிய அனைத்து விட­யங்­க­ளையும் செய்­துள்ளார். 


ஆனால் பேராயர் வேத­னைப்­பட்டு கண்ணீர் விடும் அள­விற்கு விட­யங்கள் காணப்­ப­டு­வ­தாயின் ஜனா­தி­ப­தியை சந்­தித்து பேசி தீர்வு காண்­பதே சிறந்­தது என சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செயலர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். 
ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 


அவர் தொடர்ந்தும் கூறு­கையில் , 


உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இடம்­பெற்ற பின்னர் ஜனா­தி­பதி நாட்டின் தலைவர் என்ற வகையில் செய்ய கூடிய அனைத்து விட­யங்­க­ளையும் செய்­துள்ளார். புல­னாய்வு பிரி­வு­களை வலுப்­ப­டுத்தி அனை­வ­ரையும் கைது செய்து பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார். இன்னும் கைதுகள் இடம்­பெ­று­கின்­றன . மூன்று மாதத்தில் மறு­ப­டியும் எவ்­வி­த­மான சம்­ப­வமும் இடம்­பெ­ற­வில்லை. 


வேறு பிரச்­சி­னைகள் இருந்­தாலும் ஜனா­தி­ப­தியை சந்­தித்து கலந்­து­ரை­யாட முடியும். கத்­தோ­லிக்க மக்­க­ளுக்கு ஏற்­பட்ட பாதிப்­புகள் குறித்து வேத­னை­ய­டை­கின்றோம். வத்­தி­கா­னுக்கு சென்ற பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை கண்ணீர் விட்­ட­ழுதார். அவர் வேத­னைப்­ப­டு­கின்ற அளவிற்கு விடயங்கள் இருக்கின்றன. அவரை நாங்கள் கௌரவத்துடன் மதிக்கின்றோம். எனவே ஜனாதிபதியை சந்தித்து பேச வேண்டும் என்றே கூறுகின்றோம்.