ஐரோப்­பிய ஒன்­றி­யத்தைச் சேர்ந்த 8 நாடுகள் மத்­தி­ய­த­ரைக்­க­டலில் மீட்­கப்­படும் குடி­யேற்­ற­வா­சி­களின் மீள்­கு­டி­ய­மர்த்­தலை தம்­மி­டையே பகிர்ந்துகொள்ள இணங்­கி­யுள்­ள­தாக பிரான்ஸ் ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக்ரோன் தெரி­வித்தார்.

ஆனால் மேற்­படி நாடு­களில் இத்­தாலி உள்­ள­டங்­க­வில்லை என அவர் கூறினார். பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஐரோப்­பிய ஒன்­றிய உள்த்துறை மற்றும் வெளிநாட்டு அமைச்­சர்­க­ளுடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின்போது  பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியால் முன்­வைக்­கப்­பட்ட கொள்­கைக்கு ஏனைய 6 நாடுகள்  ஒப்­பு­தலை அளித்­துள்­ள­தாக மக்ரோன் கூறினார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் குடி­யேற்­ற ­வா­சிகள் தொடர்­பான அள­வு­ க­டந்த வரு­கையை எதிர்­கொண்­டுள்ள நாடான இத்­ தாலி இந்தப் பேச்­சு­வார்த்­தை­களை புறக்­ க­ணித்­துள்­ளது. 

வலது சாரி லீக் கட்சியின் தலை­வ­ரான இத்­தா­லிய உள்­துறை அமைச் சர் மற்­றியோ சல்­வினி  நாட்டை குடி­வ­ரவு தொடர்­பான கடும்­போக்கை நோக்கி முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு தலைமை தாங்கி வரு­கிறார்.

அவர் பாரிஸ் நகரில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கேற்­க­வில்லை. அதே­ச­மயம் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க ளான  ஹங்­கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகள் குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் கடும்­போக்குக் கொள்­கையை பின்­பற்றி வரு­கின்­றன.

இந்­நி­லையில் குடி­யேற்­ற­வா­சிகள்  தொட ர்­பான சுமையை ஏற்க மறுத்­துள்ள நாடு ­க­ளுக்கு  ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் கட்­ட­மைப்பு நிதி­களை வழங்­கு­வ­தற்கு தான் இணக்கம் தெரி­விக்கப் போவ­தில்லை என  மக்ரோன் தெரி­வித்தார்.

ஐரோப்­பிய ஒன்­றிய உள்­துறை மற்றும் வெளி­நாட்டு அமைச்­சர்­களின் கூட்­டத்தில் பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியால் முன்­வைக்­கப்­பட்ட திட்­டத்­திற்கு 14 அங்­கத்­துவ நாடுகள் ஒப்­புதல் அளித்­துள்­ளன.

 அவற்றில் குரொ­ஷியா, பின்­லாந்து, பிரான்ஸ், ஜேர்­மனி, அயர்­லாந்துஇ லிது­வே­னியா, லக்­ஸம்பேர்க் மற்றும் போர்த்­துக்கல் ஆகிய 8  நாடுகள் குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­படும் ஸ்திரமான பொறிமுறைக்கு ஒத்துழைப்பை வழங்கவும் அதில் பங்கேற்கவும் இண க்கம் தெரிவித்துள்ளன. ஒப்புதலை அளித் துள்ள ஏனைய 6 நாடுகள் எவை என் பது தொடர்பில் விபரம் எதுவும் வெளியி டப்படவில்லை.