யாழ்ப்பாணம், நெல்லியடியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை டிப்பர் வாகனம் மோதியதால்  குறித்த  விபத்து இடம்பெற்றுள்ளது. 

வடமராட்சி-நவிண்டிலைச் சேர்ந்த  20 வயதான மு.கிரிசாந் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.