இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட குப்பைகள் குறித்து மங்கள அதிரடி உத்தரவு!

Published By: Vishnu

24 Jul, 2019 | 10:04 AM
image

பிரித்தானியாவிலிருந்த கொள்கலன்களில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கழிப்பொருட்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சர் மங்கள சமரவீர இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், வெளி­நாட்­டி­லி­ருந்து கொள்­க­லன்­களில் அடைத்து இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்ள பெரு­ம­ளவு கழி­வுகள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­துடன், அதன் முடிவில் இக்­க­ழி­வு­களை மீண்டும் அனுப்பி வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை துரி­த­மாக மேற்­கொள்­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோதாக கொழும்­பி­லுள்ள சுங்­கத்­தி­ணைக்­க­ளத்தின் தலைமைக் காரி­யா­லயத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­ல் சுங்­கப்­பி­ரிவின் ஊடகப் பேச்­சாளர் சுனில் ஜய­ரத்ன தெரி­வித்திருந்தார்.

சர்­வ­தேச வர்த்­தகம் தொடர்பில் வழங்­கப்­படும் வாய்ப்­புக்­களைப் பயன்­ப­டுத்தி உப­யோ­கப்­ப­டுத்­தப்­பட்ட மெத்தை மற்றும் வேறு கழி­வுகள் அடங்­கிய 241 கொள்­க­லன்கள் இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளன.அவற்றில் 130 கொள்­க­லன்கள் இந்த இறக்­கு­ம­தி­யுடன் தொடர்­பு­டைய தரப்­பினால் பொறுப்­பேற்­கப்­பட்டு விட்­டன. எஞ்­சிய 111 கொள்­க­லன்கள் கொழும்புத் துறை­மு­கத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளன.

சுங்­கப்­பி­ரி­வினால் இவ்­வி­டயம் தொடர்பில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நிலையில், அது குறித்த முழு விப­ரங்­க­ளையும் தற்­போது வெளி­யிட முடி­யாத சூழ்­நிலை உள்­ளது, வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்கு­ மதி செய்­யப்­படும் அனைத்துப் பொருட்­களும் சுங்­கப்­பி­ரி­வினால் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை.

அந்த வகையில் இலங்கை முத­லீட்டுச் சபை­யுடன் ஒப்­பந்தம் மேற்­கொண்டு, சுதந்­திர வர்த்­தக வாய்ப்­புக்­களைப் பெற்­றி­ருக்கும் பிர­பல தனியார் நிறு­வனம் ஒன்­றினால் 130 கழிவு கொள்­க­லன்கள் பொறுப்­பேற்­கப்­பட்டு விட்­டன. இத­னுடன் மேலும் இரு பிர­பல தனியார் நிறு­வ­னங்கள் தொடர்­பு­பட்­டுள்­ளன.

அந்த வகையில் தற்­போது இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்ள கழி­வுகள் குறித்து மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை­யினால் பரி­சோ­த­னைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­னவா என்­பது எமக்குத் தெரி­யாது. எனினும் நாம் இவ்­வி­டயம் தொடர்பில் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி விசா­ர­ணை­களை ஆரம்­பித்தோம்.

உல­க­ளவில் மருத்­துவக் கழி­வுகள், இலத்­தி­ர­னியல் கழி­வுகள், அணுக் கழி­வுகள் உள்­ளிட்ட பெரு­ம­ள­வான கழி­வுகள் வெளி­யேற்­றப்­ப­டு­கின்­றன. இவை பல மில்­லியன் டொலர்­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. இதன் பின்­ன­ணியில் உள்ள ஆபத்து இன்­னமும் புரிந்­து­கொள்­ளப்­ப­ட­வில்லை. ஆனால் அனைத்து அர­சாங்­கங்­க­ளி­டமும் நாங்கள் இதுபற்றி எடுத்துக்கூறி வந்திருக்கிறோம்.

இந்நிலையில் இதுகுறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதன் முடிவில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகளை மீள் ஏற்றுமதி செய்வதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதற்குத் தீர்மானித்திருக்கிறோம் என சுங்­கப்­பி­ரிவின் ஊடகப் பேச்­சாளர் சுனில் ஜய­ரத்ன மேலும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே நிதியமைச்சர் மங்கள சமரவீர குறித்த குப்பைகள் அடங்கிய கொள்கலன் மீது விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15