அமெ­ரிக்­கா­வுக்கு விஜயம் செய்­துள்ள பாகிஸ்­தா­னிய  பிர­தமர்  இம்ரான் கான்  அமெ ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பை நேற்று முன்தினம் திங்­கட்­கி­ழமை சந்­தித்து  பேச்­சு­வார்த்தை நடத்தினார்.

அவர் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யுடன் நேரடி சந்­திப்பை மேற்கொள்வது இதுவே முதல் தட­வை­யாகும்.

ஆப்­கா­னிஸ்­தானில்  இடம்­பெற்றுவரும்  மோதல்­களால்  முறுகல் நிலையை அடைந்­துள்ள அமெ­ரிக்க–பாகிஸ்­தா­னிய உற­வு­களை சீர்­செய்யும்  நட­வ­டிக்­கையின் அங்­க­மாக இந்த சந்­திப்பு அமைவதாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் பொய்­களைக் கூறி வஞ்­ச­கத்­துடன் செயற்­பட்டு வரு­வ­தாக  குற்­றஞ்­சாட்டி அந்­நாட்­டுக்­கான  பாதுகாப்பு நிதி­யு­த­வியை கடந்த வருட ஆரம்­பத்தில்  குறைத்திருந்தார்.

 இம்ரான்கானு­ட­னான சந்­திப்பின்போது  காஷ்மீர் பிரச்­சினை தொடர்பில்  இந்­தியா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்­கு­மி­டை­யி­லான  பேச்சு­வார்த்­தை­களை மத்­தி­யஸ்தம் செய்­வ­தற்கு ட்ரம்ப் இணக்கம் தெரி­வித்­துள்ளார்.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின்  வேண்­டு­கோளின் பேரில் மேற்­படி இணக்­கப்­பாட்டைத் தான் தெரி­விப்­ப­தாக  அவர் கூறினார். ''இந்த விவ­கா­ரத்தில் என்னால் உதவ முடிந்தால் நான் மத்­தி­யஸ்தர் ஒரு­வ­ராக செயற்­ப­டு­வதில் விருப்பம் கொண்டுள் ளேன். என்னால் எதையும் செய்ய முடியுமாக இருக்கும் பட்சத்தில் எனக்கு  அதை அறியத் தாருங்கள்'' என ட்ரம்ப் தெரிவித்தார்.