(ஆர்.விதுஷா)

கல்வி  பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில்   குறைந்த  பட்ச  தராதரங்களும்  இல்லாமல்  வெளிநாடுகளுக்கு   சென்று  மருத்துவப்படிப்பை  மேற்கொண்டு   பட்டதாரிகளாக   வந்திருப்பவர்களுக்கு  ஸ்ரீலங்கா  மருத்துவ  கவுன்சிலில்  பதிவு  செய்வதற்கு   அனுமதிக்கப்படுவதாக   குற்றஞ்சாட்டியிருக்கும்  அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்  சங்கம்   அதற்கு   தகுதியற்றவர்களை    அனுமதிப்பதற்கு   மருத்துவ கவுன்சிலின்  அதிகாரிகளும்  ,  உறுப்பினர்களும்    எதிராக  கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்  எனவும்  வலியுறுத்தியுள்ளது.  

இது  தொடர்பில்  கவனம்  செலுத்துமாறு  அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்  சங்கத்தின்  செயலாளர்  வைத்தியர்  ஹரித  அளுத்கே  ,  ஸ்ரீலங்கா  மருத்துவ  கவுன்சிலின்  தலைவர்  பேராசிரியர்  ஹரேந்திர  டீ  சில்வாவுக்கு  கடிதமொன்றை  இன்று செவ்வாய்க்கிழமை  அனுப்பியுள்ளார்.  

அந்த  கடிதத்தின்  பிரதிகள்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் ,  ஸ்ரீலங்கா  மருத்துவ  கவுன்சிலின்  பதிவாளர்  , ஸ்ரீலங்கா  மருத்துவ  கவுன்சிலின் அனைத்து உறுப்பினர்கள்  ,  அனைத்து மருத்துவ  பீடங்கள், சுகாதார  நிறுவனங்களின்  தலைவர்கள்  மற்றும்   அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்  சங்கத்தின்  அனைத்து கிளைகளிற்கும்    அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது.