மானிப்பாயில் இளைஞன் சுட்டுக்கொலை ; கைதான சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

23 Jul, 2019 | 09:53 PM
image

மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடத்த வந்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறிலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மானிப்பாய் இணுவில் வீதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பலை காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்தனர். எனினும் அவர்கள் தப்பித்த வேளை, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது

கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். 

ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து வாள்களையும் மீட்டிருந்தனர். 

இந்த நிலையில் மானிப்பாயில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் தாக்குதல் நடத்துவதற்கு வந்த கும்பலுக்கு பாதை காண்பிப்பதற்கு வந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்புப் பொலிஸ் பிரிவினரே இவ்வாறு இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.

யாழ்ப்பாணம், நாவாந்துறை அராலி வீதி வசந்தபுரத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்து சூடு இடம்பெற்றதும் மோட்டார் சைக்கிளைக் கைவிட்டுத் தப்பிச் சென்ற இளைஞனின் பணப்பையை (பேர்ஸ்) சம்பவ இடத்தில் தவறிய நிலையில் பொலிஸார் மீட்டிருந்தனர்.

மானிப்பாய் சுதுமலை தெற்கு ஐங்கரன் வீதியைச் சேர்ந்த சிவசுந்தரராஜா சானுசன் (வயது – 18) என்ற இளைஞனே இவ்வாறு தனது பணப்பையைத் தவறவிட்டுச் சென்றார். அவரது அடையாள அட்டையை வைத்து சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் சந்தேகநபரை மூத்த சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முற்படுத்தினார்.

அவரைக் கைது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். எனினும் ஏனைய சந்தேகநபர்கள் நால்வர் தொடர்பிலும் எந்தத் தகவலையும் சானுசன் தெரிவிக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னலையில் இன்று மாலை முற்படுத்தினர்.

மேலும் சந்தேகநபர்களைக் கைது செய்யவேண்டியுள்ளதாகப் பொலிஸார் மன்றுரைத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபர்கள் மூவரையும் வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52