இந்திய அணியுடானான சர்வதேச இருபதுக்கு - 20 தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியில் சுனில் நரேன் மற்றும் கிரேன் பெல்லார்ட் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் 3 ஒருநாள், 3 இருபதுக்கு - 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் நிறுவனம் இருபதுக்கு - 20 தொடரின் முதல் இரு போட்டிகளில் விளையாடவுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணியை அறிவித்துள்ளது.

அந்த அணியில் கிரேன் பொல்லார்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன் முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகிய சகலதுறை ஆட்டக்காரர் ரசலும் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் உடல்தகுதியில் தேர்வுபெற்றால் மாத்திரம் அவர் அணியில் தொடர முடியும்.

14 பேர் கொண்ட மே.இ.தீவுகள் அணியின் விவரம் பின்வருமாறு:

பிரித்வெய்ட் தலைமையிலான 14 பேர் கொண்ட இந்த அணியில் ஜோன் கேம்பல், இவன் லிவீஸ், சிம்ரன் ஹெட்மேயர், நிகோலஷ் பூரண், பொல்லார்ட், ரோவ்மேன் பவுல், கீமோ போல், சுனில் நரேன், ஷெல்டன் கோட்ரல், உஷேன் தோமன், அந்தோனி ப்ராம்பெல், ரசல்  மற்றும் கேரி பீய்ரே.