(ஆர்.விதுஷா)

அரசாங்கம் அமெரிக்காவுடன் சைச்சாத்திட உத்தேசித்திருக்கும்  மூன்று ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொழும்பு, கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜனநாயக  மக்கள் காங்கிரஸ்,  சோஷலிச மக்கள் முன்னணி மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி  ஆகிய  கட்சிகள்  ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்த  எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய  மக்கள்  சுதந்திர  முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, தினேஷ்  குணவர்த்தன  உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை முறியடிப்போம், நாட்டைக்காப்போம், அமெரிக்கா உடன்படிக்கையான சோபாவை  ரத்து செய்து நாட்டைக்காப்போம். என்ற  சுலோகங்கள்  எழுதப்பட்ட  பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 50 இற்கும் அதிகமானோர் தமது எதிர்ப்பை  வெளிப்படுத்தியிருந்தனர்.