தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்திய வெடிபொருட்கள் வெலிசறை கடற்படை முகாமினால் சட்ட ரீதியாக விநியோகிக்கப்பட்டவையா?

Published By: Vishnu

23 Jul, 2019 | 07:24 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

21/4 உயிர்த்த ஞாயிறு தினத்தில், 3 கத்தோலிக்க தேவாலயங்கள் 3 நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் போது பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள், வெலிசறை கடற்படை முகாமைன் கீழ் உள்ள வெடிபொருள் களஞ்சியத்தில் இருந்து சட்ட ரீதியான செயற்பாடுகளுக்காக, உரிய நடை முறைகளைப் பின்பற்றி விநியோகிக்கப்பட்டவையா என பாதுகாப்பு தரப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  

சி.ஐ.டி. எனப்படும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதால் அந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை வெளிப்படுத்துவது பொருத்தமற்றது என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார். 

தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை வெளிப்படுத்தினார்.

எவ்வாறாயினும் சம்மாந்துறை மற்றும் நொச்சியாகம பகுதிகளில் பயங்கர்வாதிகளுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் கைதானவர்களிடமிருந்து மீட்க்கப்பட்ட வெடி பொருட்களில்,  வெலிசறை முகாம் ஊடாக சட்ட ரீதியாக விநியோகிக்கப்பட்ட வெடிபொருட்கள் இருந்ததாக  லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார ஊடகங்களிடம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47