மனோ கணேசனின் தலையீட்டால் முடிவுற்ற சத்தியாக்கிரக போராட்டம்

Published By: Digital Desk 4

23 Jul, 2019 | 06:49 PM
image

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கல்முனை பாண்டிருப்பு  பகுதியில் இடம்பெற்ற  சத்தியாக்கிரக போராட்டம் இரண்டாவது நாளாக  முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் 2 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை(23)   அம்பாறை மாவட்ட முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில்  இரண்டாவது நாளாகவும் கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் முன்னெடுத்த இப்போராட்டம் குறித்த அரசியல் கைதியின் நிலைமையை கருத்தில் கொண்டு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

இதன் போது முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன் கல்முனை முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர் கி.லிங்கேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்ட இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 எனினும் மகசின் சிறையில் ஒன்பதாவது நாளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் கனகசபை தேவதாசன் உடல்நிலை மோசமடைந்து இருப்பதாகவும்   அவரை  பார்வையிடுவதற்காக தேசிய சுகவாழ்வு சமூக முன்னேற்ற அரசகரும மொழிகள் மற்றும் இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சர்  மனோ கணேசன்  சென்று உண்ணாவிரதத்தை நிறைவு செய்ததை அடுத்து மேற்குறித்த போராட்டமும் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:14:14
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53