(நா.தினுஷா)

உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். 

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

எதிர்வரும் 30,31 மற்றும் ஆகஸ்ட் முதலாம் திகதிகளிலேயே இவ்வாறு 12 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்தாகவும், 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் பட்டபடிப்பினை நிறைவு செய்த மாணவர்களுக்கு இதனூடாக வேலைவாய்ப்பு கிடைக்கும். 

அவ்வாறே இதன்போது வெளிவாரிப் பட்டதாரிகளுக்கும் வேலைவாயப்பினை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் கூறினார்.