கிளிநொச்சி விசுவமடு நாதன்குடியிருப்பு பகுதியில் பகுதியில் அமைந்துள்ள தனியார் வீடு ஒன்றில் நீதிமன்ற அனுமதியுடன் பொலிசார் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை கடந்த 20.07.2019 அன்று இரவு 9 மணியளவில் சுமார் ஏழு பேர் கொண்ட மர்மகும்பலொன்று நாதன் குடியிருப்பில் உள்ள குறித்த வீடொன்றுக்குள் திடீரென புகுந்துள்ளனர்.

வீட்டுக்குள் புகுந்து வீட்டு உரிமையாளர்களை கை, கால், வாய்களை கட்டிப்போட்டு அவர்களின் வீட்டு அருகில் மர்ம கும்பலொன்று கிடங்கு ஒன்றை தோண்டி பின் மூடிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் உள்ளே சென்ற போது அந்த வீட்டில் நடக்கமுடியாத பெண்ணும் அவருடைய மகனும் இருந்த நிலையில், அவர்களை பிடித்து கைகள், கால்கள், கண்கள் மற்றும் வாயை கட்டிவிட்டு ஒரு அறைக்குள் இருவரையும் வைத்து பூட்டி விட்டுள்ளனர்.

தொடர்ந்து வீட்டுக்குள் பக்கத்தில் பாரிய கிடங்கொன்றை கிண்டி பின்னர் அந்த கிடங்கை மூடிவிட்டு கட்டிவிட்டு சென்ற சிறுவனுடைய கைகள், கால்கள், கண்கள் மற்றும் வாயை அவிழ்த்து விட்டு இரவு ஒன்பது மணியளவில் வீட்டை விட்டு சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நடக்கும் போது வீட்டிலிருந்த பெண்ணின் தாயாரின் தந்தை வெளியில் சென்றிருந்த நிலையில் காலையில் வீட்டுக்கு வந்த போது நடந்த சம்பவத்தை பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வீட்டுக்கு வந்து நடந்தவற்றை அறிந்துகொண்ட பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே இன்று தேடுதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது,