(நா.தினுஷா) 

திரையுலக கலைஞர்களுக்கான 19 ஆவது  ஜனாதிபதி விருது வழங்கும் வைபவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு நெலும் பொகுண கலையரங்கில் இடம்பெறவுள்ளது. 

கடந்த மூன்று வருடங்களில் உருவான சிறப்பான திரைப்பட படைப்புகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத் துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.