இந்திய பிரதமர் நரேந்திர மோடி பராளுமன்றில் ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘இன்று ஒரு சிறப்பு நண்பர் என்னை பராளுமன்றில் சந்தித்ததாக’ பதிவிட்டுள்ளார்.

முதல் புகைப்படத்தில், புன்னகையுடன் தோன்றும் குழந்தையுடன் மோடி விளையாடுவதாகத் தெரிகிறது.

இரண்டாவது புகைப்படத்தில், குழந்தை தனது முன் மேசையில் வைக்கப்பட்டுள்ள சொக்லேட்டுகளை  எடுப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது.

மோடி குழந்தைகளுடன் புகைப்படம் எடுப்பது இது முதல் முறை அல்ல எனவும்,ஆனால் அவர் குழந்தையை "சிறப்பு நண்பர்" என்று அழைப்பது ஆச்சரியமளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.