19 வயதுக்குட்பட்ட சுப்பர் ப்ரொவென்ஷியல் : கண்டியை வீழ்த்திய காலிக்கு மூன்றாமிடம்

Published By: Daya

23 Jul, 2019 | 04:38 PM
image

9 வயதுக்குட்பட்ட சுப்பர் ப்ரொவென்ஷியல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் கண்டி அணியை 9 ஓட்டங்களால் வெற்றிகொண்ட காலி அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள 4 அணிகள் பங்குகொள்ளும் 19 வயதுக்குட்பட்ட சுப்பர் ப்ரொவென்ஷியல் கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 3 ஆம் மற்றும் 4 ஆம் இடங்களை பிடித்த கண்டி, காலி ஆகிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது இடத்துக்கான போட்டி நேற்று தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் 302 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் நவோட் பரணவித்தான (91), சியான் கலிந்து (76) ஆகியோர் பிரகாசித்தனர்.

பந்துவீச்சில் லோஹன அரோஷ ஹெற்றிக் சாதனையுடன் 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி வெற்றி பெறும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் விக்கெட்டுக்கள் சரிய 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 9 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியில் கண்டி அணி வீரரான லோஹன அரோஷ ஹெற்றிக் சாதனையுடன் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், துடுப்பாட்டத்திலும் 44 ஓட்டங்களை குவித்து தனது சகலதுறை ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தமை விசேட அம்சமாகும். இப்போட்டியில் இவர் விளையாடிய கண்டி அணி தோல்வியைத் தழுவியபோதிலும் லோஹன அரோசவுக்கு போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை வழங்கப்பட்டது. 

(எம்.எம்.எஸ்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21