(இராஜதுரை ஹஷான்)

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் திறைமறைவில் முன்னெடுக்காது மாறாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிப்படையான வகையில்  செயற்படுவது அவசியம்  என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்தோடு மத்ரஷா பாடசாலைகளை  கண்காணித்தல் மற்றும் ஒழுங்குப்படுத்தல் தொடர்பில் முன்வைக்பட்டுள்ள யோசனையின் உள்ளடக்கத்தை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும்  என அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் தலைமை காரியாலயத்தில் இன்று  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மத்ரஸா பாடசாலைகளை கண்காணித்தல் மற்றும் ஒழுங்குப்படுத்தல் தொடர்பில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்விடயம்  தொடர்பில்  இதுவரையில் எவ்வித விடயங்களும் வெளிப்படுத்தப்படவில்லை.  

மத்ரஸா பாடசாலைகள் பகிரங்கமாக   எமது பொது பாடத்திட்டத்திற்கு அமைய  பிற மதங்கள் மீதான வெறுப்புக்களை  மாணவர்கள் மத்தியில்  கற்பித்துள்ளது என்பதற்கு  உரிய ஆதாரங்கள் உள்ளன.

உலமா சபையின் தேவைகளுக்கு அமைய  மத்ரஸா பாடசாலைகளினை  கண்காணித்தல்  சட்டத்தை உருவாக்க இடமளிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.