இந்தியாவில் உத்தரகாண்ட மாநிலத்தில் உத்தர்காஷி மாவட்டத்தைச் சேர்ந்த 132 கிராமங்களில் கடந்த 3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக் கூட பிறக்கவில்லை என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரகாண்ட மாநிலத்தில் அதிகாரபூர்வமாக வெளியான தகவலின்படி 132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களில் மொத்தம் 216 குழந்தைகள் பிறந்ததாகவும் அதில் ஒன்றுகூட பெண் குழந்தை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் கல்பனா தாகூர், 

''மூன்று மாதங்களாக 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்பது யதார்த்தமானது அல்ல. இந்தப்பகுதியில் கருக்கலைப்பு அல்லது பெண் சிசுக்கொலை நடந்துவருவதை இந்த புள்ளிவிவரம் வெட்டவெளிச்சமாக காட்டுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய குழுக்கள் நியமித்து இதுகுறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.