வடகொரிய ஜனாதிபதி கிம்ஜொங் அன் நீர்மூழ்கியொன்றை பார்வையிடு;ம் படத்தை அந்நாட்டின் தேசிய ஊடகம் வெளியிட்டுள்ளதை தொடர்ந்து வடகொரியா தொடர்ந்தும் தனது ஆயுததயாரிப்புகளில் ஈடுபடுகின்றது என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.

வடகொரியாவின் உத்தியோகபூர்வ ஊடகமான கேஎன்சிஏ கிம்ஜொங்  நீர் மூழ்கியை பார்வையிடும் படத்தை வெளியிட்டுள்ளது.

நீர்மூழ்கி குறித்த விபரங்களையும் அதி;ல் பொருத்தப்படவுள்ள ஆயுதங்கள் குறித்த விபரங்களையும் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார்கள் என  கேஎன்சிஏ தெரிவித்துள்ளது.

வடகொரிய ஜனாதிபதி முழு திருப்தியையும் வெளியிட்டுள்ளதுடன்  நீர்மூழ்கிகள் மற்றும் கடற்படை சார்ந்த ஆயுதங்களை தொடர்ச்சியாக நம்பகதன்மை மிக்க விதத்தில் அதிகரிப்பதன் மூலம் தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கான வடகொரியாவின் திறனை அதிகரிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் என கேஎன்சிஏ தெரிவித்துள்ளது.

விரைவில்  வடகொரியாவின் கடற்பரப்பில் நீர்மூழ்கியை ஈடுபடுத்தப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியா அணுநீர்மூழ்கியொன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிரிகளால் கண்டுபிடித்து அழிக்க முடியாத நீர்மூழ்கியை உருவாக்குவதே வடகொரியாவின் நோக்கம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2016 இல் வடகொரியா நீர்மூழ்கியிலிருந்து செலுத்தப்படும் எவுகணையொன்றை பரிசோதனை செய்திருந்தது.

வடகொரியாவிடம் 70 நீர்மூழ்கிகள் உள்ளபோதிலும் அவை காலத்தால் பிந்தியவை என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.