இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு குப்பைகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் தம் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஹேய்லிஸ் நிறுவனம் நிராகித்துள்ளது. 

இதேவேளை, வெளி­நாட்­டி­லி­ருந்து கொள்­க­லன்­களில் அடைத்து இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்ள பெரு­ம­ளவு கழி­வுகள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­துடன், அதன் முடிவில் இக்­க­ழி­வு­களை மீண்டும் அனுப்பி வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை துரி­த­மாக மேற்­கொள்­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளதாக சுங்­கப்­பி­ரிவின் ஊடகப் பேச்­சாளர் சுனில் ஜய­ரத்ன தெரி­வித்திருந்தார்.   

இது தொடர்பில் நேற்றையதினம் ஹேய்லிஸ் நிறுவனம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை முன்னெடுத்ததுடன் ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது.

ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

Hayleys Free Zone yard வளாகத்தில் தற்போது சேமிக்கப்பட்டுள்ள 130 கொள்கலன் அளவிலான உபயோகப்படுத்தப்பட்ட மெத்தைகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகிவரும் பாதகமான பரப்புரைகள் தொடர்பில் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளதுடன் இந்த மெத்தைகள் Ceylon Metal Processing Corporation (Pvt) Limited இனால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களே இந்த சரக்குகளின் உண்மையான உரிமையாளர்கள் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, Hayleys Free Zone ஆனது Ceylon Metal Processing Corporation (Pvt) Ltd நிறுவனத்தினால் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ள மெத்தைகளை பதப்படுத்தி, மீள் ஏற்றுமதி செய்யும் நோக்கில் நியமிக்கப்பட்ட freight forwarder ETL Colombo (Pvt) Ltd உடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டது.

குறித்த சரக்கானது Hayleys Free Zone இற்கு freight forwarder ETL Colombo (Pvt) Ltd இனால் ஒப்படைக்கப்பட்டதுடன், இது Free Zone வளாகத்திற்கு வந்து சேரும் சரக்கானது Free Zone நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட வேண்டுமென்ற மையத்தின் ஒழுங்கு விதிகளின் பிரகாரம் இடம்பெற்றது. 

சரக்கைப்பெறுபவர் Hayleys Free Zone Limited என CUSDEC தெரிவிக்கின்ற போதிலும் , அந்த சரக்கின் மீது எந்த சட்டரீதியான உரிமையும் இல்லை என்பதுடன் வணிக விலைப்பட்டியலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளமையைப் போல பாவிக்கப்பட்ட மெத்தைகளின் உரிமையாளரோ அல்லது இறக்குமதியாளோரோ தான் இல்லை என்பதனையும் Hayleys Free Zone Limited குறிப்பிடுகின்றது.

தற்போது கேள்விக்குள்ளாகியுள்ள 130 கொள்கலன் சரக்கானது அபாயகரமற்றது என குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் கவனமாக பரிசீலிக்கப்பட்டதன் பின்னரே Hayleys Free Zone yard இற்கு ஏற்கப்பட்டன என நிறுவனம் குறிப்பிடுகின்றது.

மொத்தமான 130 கொள்கலன் பாவிக்கப்பட்ட மெத்தைகளில் 29 கொள்கலன்களை இதுவரை Hayleys Free Zone பதப்படுத்தி மீள் ஏற்றுமதி செய்துள்ளது. பதப்படுத்தலைப் பொறுத்தவரையில், Hayleys Free Zone ஆனது மெத்தையை பிரித்தல் மற்றும் துணி, பஞ்சு, ஒட்டுக் கம்பளம் மற்றும் உருக்கினை வேறுபடுத்தி இவை ஒவ்வொன்றையும் Ceylon Metals இன் தேவைக்கேற்ப வேறு வேறு கொள்கலன்களின் பொதி செய்து மீள் ஏற்றுமதி செய்யும் சேவையை வழங்கி வருகின்றது.

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த மெத்தைகளை தனது சொந்த செலவில் பதப்படுத்தி விரைவாக மீள் ஏற்றுமதி செய்யும் முடிவை எடுத்துள்ளதாக Hayleys Free Zone தெரிவித்துள்ளது.

தற்போது துறைமுகத்தில் உள்ள 102 கொள்கலன்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை கொழும்பு துறைமுகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள 102 கொள்கலன்கள் தொடர்பிலான மேலதிக குற்றச்சாட்டுக்களை மறுக்கும் Hayleys Free Zone Limited, குறிப்பிட்ட 102 கொள்கலன்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளது. 

Hayleys Free Zone Limited இன் பணிப்பாளர் அசங்க ரத்நாயக்க இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

Hayleys Free Zone கொழும்பு துறைமுகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள 102 கொள்கலன்களுடன் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லை. 

மேலும் குறிப்பிட்ட கொள்கலன்களின் இறக்குமதியாளரோ அல்லது சரக்கை ஏற்றுக்கொள்பவரோ அல்லது லொஜிஸ்டிக் சேவை வழங்குனரோ இல்லை” என்றார்.

இதேவேளை Hayleys PLC இன் தலைவரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டித்தகே இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,” நெறிமுறை மற்றும் சமூக பொறுப்புள்ள நிறுவனம் என்ற வகையில், Hayleys எங்கள் தாய்நாட்டிற்கு குப்பைகளை இறக்குமதி செய்வது போன்ற எந்த விதத்திலும் நியாயமற்ற செயலிலும் ஈடுபடாது எனக் குறிப்பிட்டார்.

Hayleys Free Zone இதுவரை கிடைத்த ஒத்துழைப்புக்கு முதலீட்டுச் சபைக்கு (BOI) இற்கு நன்றி தெரிவிப்பதோடு, Hayleys Free Zone yard இல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இந்த உபயோகப்படுத்தப்பட்ட மெத்தைகளை துரிதமாக பதப்படுத்தலை எளிதாக்க முதலீட்டுச் சபையுடன் இணைந்து செயற்படும்.

Hayleys Free Zone yard இல் உள்ள மெத்தைகள் சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாது என்பதனை உறுதிப்படுத்தும் பொருட்டு மத்திய சூற்றாடல் அதிகாரசபையுடன் நெருக்கமாக செயற்படும் என்பதனையும் நிறுவனம் குறிப்பிடுகின்றது.

இந்நிலையில், வெளி­நாட்­டி­லி­ருந்து கொள்­க­லன்­களில் அடைத்து இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்ள பெரு­ம­ளவு கழி­வுகள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­துடன், அதன் முடிவில் இக்­க­ழி­வு­களை மீண்டும் அனுப்பி வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை துரி­த­மாக மேற்­கொள்­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளதாக சுங்­கப்­பி­ரிவின் ஊடகப் பேச்­சாளர் சுனில் ஜய­ரத்ன தெரி­வித்திருந்தார்.   

சர்­வ­தேச வர்த்­தகம் தொடர்பில் வழங்­கப்­படும் வாய்ப்­புக்­களைப் பயன்­ப­டுத்தி உப­யோ­கப்­ப­டுத்­தப்­பட்ட மெத்தை மற்றும் வேறு கழி­வுகள் அடங்­கிய 241 கொள்­க­லன்கள் இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளன. அவற்றில் 130 கொள்­க­லன்கள் இந்த இறக்­கு­ம­தி­யுடன் தொடர்­பு­டைய தரப்­பினால் பொறுப்­பேற்­கப்­பட்டு விட்­டன. எஞ்­சிய 111 கொள்­க­லன்கள் கொழும்புத் துறை­மு­கத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளன.

சுங்­கப்­பி­ரி­வினால் இவ்­வி­டயம் தொடர்பில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நிலையில், அது குறித்த முழு விப­ரங்­க­ளையும் தற்­போது வெளி­யிட முடி­யாத சூழ்­நிலை உள்­ளது, வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்கு­ மதி செய்­யப்­படும் அனைத்துப் பொருட்­களும் சுங்­கப்­பி­ரி­வினால் பரி­சோ­த­னைக்குட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை.

அந்த வகையில் இலங்கை முத­லீட்டுச் சபை­யுடன் ஒப்­பந்தம் மேற்­கொண்டு, சுதந்­திர வர்த்­தக வாய்ப்­புக்­களைப் பெற்­றி­ருக்கும் பிர­பல தனியார் நிறு­வனம் ஒன்­றினால் 130 கழிவு கொள்­க­லன்கள் பொறுப்­பேற்­கப்­பட்டு விட்­டன.இத­னுடன் மேலும் இரு பிர­பல தனியார் நிறு­வ­னங்கள் தொடர்­பு­பட்­டுள்­ளன.

கழிவு முகா­மைத்­துவம் மற்றும் அதன் ஏற்­று­மதி, இறக்­கு­மதி தொடர்பில் 1989 ஆம் ஆண்டு கைச்­சாத்­தி­டப்­பட்ட ‘பாசெல்’ ஒப்­பந்­தத்தில் இலங்­கையும் அங்­கத்­துவம் வகிக்­கின்­றது. அதன்­படி கழி­வுகள் என்று இனங்­கா­ணப்­பட்­ட­வற்றை ஒரு நாட்டில் இறக்­கு­மதி செய்யும் போது, அந்­நாட்டின் மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை அதன் சாதக, பாத­கத்­தன்­மைகள் தொடர்பில் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள முடியும்.

அந்த வகையில் தற்­போது இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்ள கழி­வுகள் குறித்து மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை­யினால் பரி­சோ­த­னைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­னவா என்­பது எமக்குத் தெரி­யாது. எனினும் நாம் இவ்­வி­டயம் தொடர்பில் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி விசா­ர­ணை­களை ஆரம்­பித்தோம்.

உல­க­ளவில் மருத்­துவக் கழி­வுகள், இலத்­தி­ர­னியல் கழி­வுகள், அணுக் கழி­வுகள் உள்­ளிட்ட பெரு­ம­ள­வான கழி­வுகள் வெளி­யேற்­றப்­ப­டு­கின்­றன. இவை பல மில்­லியன் டொலர்­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. இதன் பின்­ன­ணியில் உள்ள ஆபத்து இன்­னமும் புரிந்­து­கொள்­ளப்­ப­ட­வில்லை. ஆனால் அனைத்து அர­சாங்­கங்­க­ளி­டமும் நாங்கள் இதுபற்றி எடுத்துக்கூறி வந்திருக்கிறோம்.

இந்நிலையில் இதுகுறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதன் முடிவில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகளை மீள் ஏற்றுமதி செய்வதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதற்குத் தீர்மானித்திருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

கொழும்­பி­லுள்ள சுங்­கத்­தி­ணைக்­க­ளத்தின் தலைமைக் காரி­யா­லயத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே சுங்­கப்­பி­ரிவின் ஊடகப் பேச்­சாளர் சுனில் ஜய­ரத்ன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.