இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற நவீன சிகிச்சை முறை

Published By: Digital Desk 4

23 Jul, 2019 | 02:25 PM
image

இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளிலும், உடலின் வேறு பகுதிகளிலிருந்து இதயத்திற்கு அசுத்தமான இரத்தத்தை எடுத்து வரும் veins எனப்படும் சிரைகளிலும் என இரண்டு வகை இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற நவீன சிகிச்சைகள் அறிமுகமாகியுள்ளன.

இரத்த நாளம் என்பது இரண்டு வகைப்படும். Arteries எனப்படும் தமனி, மற்றொன்று Veins எனப்படும் சிரை. தமனியில் கொழுப்பு சேர்வதால் இரத்த நாள அடைப்பு உருவாகக்கூடும். இதற்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், புகை பிடித்தல் போன்றவை காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படுகின்றன.

சிலருக்கு மரபியல் காரணமாக இரத்தம் உறைவதில் குறைபாடு இருக்கும். சிலருக்கு அரிதாக விட்டமின் சத்து குறைபாடு இருக்கும். இவ்விரண்டு காரணங்களாலும் இரத்த நாள அடைப்பு உருவாகக்கூடும்.

சில தருணங்களில் உடம்பில் ஏதேனும் ஒரு பகுதியில் அடிபடும் போது இரத்தம் உறையும். உறைந்த இரத்தம் கட்டியாகி இரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்கும். இத்தகைய அடைப்பு தமனியில் ஏற்பட்டால் அதனை Deep Vein thrombosis  என அழைப்பார்கள். இத்தகைய அடைப்பு பலருக்கு திடீரென்று ஏற்படக்கூடும். 

அவர்கள் இதற்குரிய கால கட்டத்தில் அதாவது அடிபட்ட நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் முறையான சிகிச்சை பெறாவிட்டால், அவர்கள் அந்த உறுப்பை இழக்க நேரிடும்.தமனி இல்லாமல் சிரையில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் இதே பாதிப்பு ஏற்படும்.

இவர்களை டாப்ளர் சோதனை, சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொண்டு, உரிய சத்திரசிகிச்சையை மேற்கொண்டு அந்த இரத்த நாள அடைப்பை சீராக்க வேண்டும்.சத்திர சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பிரத்தியேகமான காலுறையை மூன்று மாத காலம் வரை அணியவேண்டியதிருக்கும்.தற்பொழுது இரத்த நாள அடைப்பை சீராக்குவதற்கான ரேடியோ ஃப்ரீக்வன்ஸி அப்ளேஷன் எனப்படும் நவீன சிகிச்சையும், லேசர் சிகிச்சையும் கண்டறியப்பட்டு இருப்பதால், ரத்த நாள அடைப்பை அகற்றுவது எளிதாக்கப்பட்டுள்ளது.

டொக்டர் மணிகண்ட பிரபு

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்சுலின் செலுத்திக்கொள்வதால் பக்க விளைவு உண்டாகுமா?

2025-03-25 15:50:06
news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18