குழந்தைகளுக்கு பெயர்வைப்பதென்பது பெற்றோரை பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சி மிக்க அனுபவம். 
அதுவும் தமிழர்களை பொறுத்தவரை அது ஒரு சாஸ்திரம் என்றும் சொல்லலாம். சடங்கு என்றும் சொல்லலாம்.


ஆனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகலாயாவிலுள்ள ‘கோங் தோங்’ எனும் கிராமத்தில் வாழும் மக்களுக்கு தமது குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் வழக்கமே இல்லையாம்.


பொதுவாக குழந்தைகள் எந்த மொழியையும் அறிவதில்லை முதலில் ஓசைகளுக்கே செவிசாய்க்கின்றன. ஆகவே இந்த கிராமத்தில் உள்ள தாய் மார் தமது குழந்தைகளைச் சிறுவயது முதல் ஒரு மெட்டை உருவாக்கி அழைக்கின்றனர். அந்த மெட்டே அவர்களுக்குப் பெயராக கொள்ளப்படுகின்றது. 


இந்த விநோதப் பெயர்களை குழந்தையின் தாய்தான் உருவாக்குகின்றாராம். தற்போதும் அந்த கிராமத்தில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் மெட்டின் மூலமாகவே அழைத்துக் கொள்கிறார்கள்.


உண்மையாகப் பார்த்தால் நாமும் சிறுவயதில் ஏதாவது ஒரு மெட்டுக்குத்தான் கவரப்பட்டிருப்போம். நீங்களும் உங்கள் உறவுகளிடம் இன்றே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் சிறுவயதில் எந்த மெட்டில் அழைக்கப்பட்டீர்கள் என்று.