ஒரு சமு­தா­யத்தின் முன்­னேற்­ற­மா­னது முற்று முழு­தாக கல்­வி­யி­லேயே தங்­கி­யுள்­ளது.

அந்த வகையில் பின்தங்­கி­யுள்ள நம் மலை­யக சமு­தாயம் எழுச்­சி­பெற வேண்­டு­மாயின் கல்­வியில் நாம் அனை­வரும் அக்­க­றை­யுடன் கருத்­தூன்றி கவனம் செலுத்தி நம் எதிர்­கால சமு­தா­யத்தை சிறந்த முறையில் செப்­ப­னிடும் பணியில் ஈடு­ப­ட­வேண்டும் என கோப்­பியோ அமைப்பின் இலங்கைக் கிளையின் கல்­வித்­துறைப் பொறுப்­பாளர் வி.கே.பால­சுப்­பி­ர­ம­ணியம் ‍தெரி­வித்தார்.கோபியோ அமைப்பின் இலங்கை கிளை­யினால் அண்­மையில் புவக்­பிட்­டிய சீ.சீ.தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்தில் நடாத்­தப்­பட்ட க.பொ.த. சாதா­ரண தர மாண­வர்­க­ளுக்­கான இல­வசத் தொடர் கருத்­த­ரங்­கு­களை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு  தெரி­வித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
க.பொ.த. சாதா­ர­ண­தரம், உயர்­தரம் ஆகிய பரீட்­சை­களில் சிறந்த பெறு­பே­று­களைப் பெற்று பல்­க­லைக்­க­ழகம் சென்று பட்டம் பெற்று உயர்ந்த தொழில் வாய்ப்­பு­க்களைப் பெறு­வது நமது சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் காலத்தின் கட்­டா­ய­மாகும். அது மட்­டு­மல்ல கல்­வியின் மூலம் சிறந்த ஒழுக்­கத்­தையும் உன்­ன­த­மான குண­வி­யல்­பு­க­ளையும், உயர்ந்த பண்­பாட்டு விழு­மி­யங்­க­ளையும்கொண்ட ஒரு சமு­தா­யத்தை உரு­வாக்க முடியும்.

அதனை கருத்­திற்­கொண்டு இவ்வில­வச தொடர் கருத்­த­ரங்­கு­களை கோபியோ ஸ்ரீலங்கா எனும் உல­க­ளா­விய இந்­திய வம்­சா­வளி மக்கள் பேரவை ஆரம்­பித்­துள்­ளது. அதனை கருத்திற்கொண்டு மாண­வர்­களும் இப்­பி­ர­தேச நம் சமு­தாய மக்­களும் சிறந்த முறையில் பயன்­ப­டுத்தி பயன்­பெற வேண்­டு­மென கேட்டுக்கொண்டார். 

 புவக்­பிட்­டிய சீ.சீ.தமிழ் மகா வித்­தி­யா­லய அதிபர் மனோ­கரன் தலை­மையில் இடம்­பெற்ற இக்­க­ருத்­த­ரங்கில்  கோப்­பியோ அமைப்பின் உறுப்­பி­ன­ரான விஜ­ய­லிங்கம் உரை­யாற்­று­கையில்,

 அவி­சா­வளை, புவக்­பிட்­டிய சீ.சீ.தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்தில் நிலவும்  ஆசிரியர் பற்­றாக்­கு­றையை மன­திற்­கொண்டு கோப்­பியோ ஸ்ரீலங்கா அமைப்­பா­னது இத்­த­கைய முயற்­சி­களில்  ஈடு­பட்­டுள்­ளது. இப்­பா­ட­சாலை மட்­டு­மல்ல இதனைச் சூழ­வுள்ள தமிழ் மொழி மூல பாட­சா­லை­களும் பயன்­பெறும் வகையில் எதிர்­வரும் நவம்பர் இறுதிவரை க.பொ.த. (சா) தர மாண­வர்­க­ளுக்­கான தொடர் கருத்­த­ரங்­கு­களை இல­வ­ச­மாக நடாத்த முன் வந்­துள்­ளது.

நவீன உலகின் போக்­கிற்கு ஏற்ப எதிர்­கா­லத்தில் சிறந்­ததோர் கல்­வி­கற்ற சமூ­க­மாக தேசிய நீரோட்­டத்தில் இணைந்து நம்மக்­களும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.