(செ.தேன்மொழி)

குடிவரவு - குடியகழ்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி தொடம்வல சந்தியில் வைத்து சந்தேக நபரை நேற்று கைது செய்ததாக பொலிசார் தெரிவித்தனர். 

27 வயதுடைய இந்திய பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 சுற்றுலா வீசா அனுமதியுடன் இலங்கை வந்துள்ள சந்தேக நபர் அனுமதிக்கான கால எல்லை நிறைவடைந்தும் நாட்டில் தங்கியிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.