வத்திகானில் இரண்டு புதைகுழிகளில் ஆயிரக்கணக்கான எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

15  வயதுடைய ஒரு சிறுமி 1983  ஆம் ஆண்டு ரோமில் காணாமல் போயுள்ளார். அவரை  குடும்பத்தினர் 36  வருடங்களாக தேடி வந்தார்கள். 

இந்நிலையில், சிறுமி காணாமல் போனது குறித்த தடயங்களைத் தேடும் ஒரு பகுதியாக, வத்திக்கான் நகரில் கிரிப்ட் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு புதைகுழிகளில் ஆயிரக்கணக்கான எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வத்திகானில்  வசித்த ஊழியர் ஒருவரின்  மகளான இமானுவேல்  ஆர்லாண்டி  கோடை  காலத்தில் இசை வகுப்பிற்கு சென்று வீடு திரும்பும் போது ரோமில் காணாமல் போயுள்ளார்.

இமானுவேல்  ஆர்லாண்டியின் காணாமல் போன மர்மம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இத்தாலியர்களைப் பிடித்திருந்த நிலையில் தற்போது எலும்பு கூடுகள் மீட்கப்பட்டமை புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.