என்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் நான் நலமாக இருக்கிறேன் என்று நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருச்சியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 சமூக வலைத்தளங்களில் செந்தில் இறந்து விட்டார் என்று பரவிய செய்திக்கு நடிகர் செந்தில் விளக்கம் அளிக்கையிலேயே என்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் நான் நலமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.