தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தி தற்­கொலை செய்து கொண்ட யாழ். கொக்­குவில் இந்துக் கல்­லூரி மாணவன் செந்­தூ­ரனின் கடி­தத்தை போட்டோ பிரதி எடுத்த சந்­தே­கத்தின் பெயரில் ஒருவர் கைது செய்­யப்­பட்டு அவர் விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­வ­தாக கோப்பாய் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்டு விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­பவர் கோண்­டாவில் பகு­தியை சோ்ந்த இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யான பாலேந்­திரன் பிரகாஷ் (23 வயது) என்­ப­வ­ராவார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை கொக்­குவில் இந்துக் கல்­லூ­ரியில் உயர் தரத்தில் கல்வி கற்று வந்த கோப்­பாயை சேர்ந்த குறித்த மாணவன் ,சிறை­களில் உள்ள தமிழ் அர­சியல் கைதி­களை புனர்­வாழ்­வ­ழித்து உடன் விடு­தலை செய்ய வேண்­டு­மென கடி­த­மொன்றை எழுதி வைத்து விட்டு ரயில் முன் பாய்ந்து தற்­கொலை செய்­தி­ருந்தார்.

இந்­நி­லை­யி­லேயே குறித்த மாண­வ­னது கடி­தத்தை போட்டோ பிரதி எடுத்த குற்­றச்­சாட்டில் குறித்த நபர் கைது செய்­யப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் குறித்த நபரை அடை­யாளம் காண்­ப­தற்­கா­கவே தாம் அதனை போட்டோ பிரதி எடுத்­தி­ருந்­த­தா­கவும் குறித்த சந்­தேக நபர் தெரி­வித்­த­தா­கவும் எனினும் இது தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை தாம் மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இதே­வேளை குறித்த மாண­வ­னது கடிதம் தொடர்­பிலும் தற்­கொ­லைக்­கான பின்­னணி தொடர்­பிலும் பல்­வேறு சந்­தே­க­ங்கள் காணப்­ப­டு­வ­தா­கவும் அவை தொடர்பாக தெளிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித் திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்