ஐரோப்­பிய ஒன்­றிய பிர­ஜா­வு­ரிமை பெறு­வதை நோக்­காகக் கொண்டு பெண்­ணொ­ரு­வரை கட த்­திய பாகிஸ்­தா­னிய  பிரஜையொ­ரு­வரை ஸ்பெயின் பொலிஸார் கைது­செய்­துள்­ளனர்.

பெயர் வெளியி­டப்­ப­டாத மேற்­படி 31 வயது பாகிஸ்­தா­னிய  பிரஜை அந்த பிர­ஜா­வு­ரிமை பெற்ற பெண்­ணொ­ரு­வரை திரு­மணம் செய்­வதன் மூலம் ஐரோப்­பிய ஒன்­றிய  பிர­ஜா­வு­ரி­மையைப் பெறுவ­தற்கு திட்­ட­மிட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதன் பிர­காரம் ஸ்லோவாக்­கி­யாவைச் சேர்ந்த குறிப்­பிட்ட 42 வயதுப் பெண்ணைக் கடத்திச் சென்ற அவர் அந்தப் பெண்ணை  தர்­ர­கொனா நக­ருக்கு அருகில் தொர்­டோஸா எனும் இடத்­தி­லுள்ள மாடிக் குடி­யி­ருப்பில் 3 வாரங்­க­ளாக அடைத்து வைத்­தி­ருந்­துள்ளார்.

இந்­நி­லையில் அந்­நபர் தவிர்க்க முடி­யாத அவ­சர வேலை­யொன்றின் நிமித்தம் வெளியில் சென்ற வேளை  அதனை  தனக் குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக்கொண்ட  அந்த பெண் ஒரு­வா­றாக அங்­கி­ருந்த தொலை­பேசி மூலம் தனது சொந்த நாட்­டி­லுள்ள தனது  நண்­பர்­க­ளுக்கும் பொலி­ஸா­ருக்கும் அழைப்பை  ஏற்­ப­டுத்­திய தனக்கு  நேர்ந்த  அவல நிலை குறித்துத் தெரி­வித்­துள்ளார்.

இதன்­போது தான் எங்கு அடைத்து வைக்­கப்­பட்­டுள்ளார் என்­பதை அறி­யாத அவர் அங்கு தான் கண்­டெ­டுத்த  துண்டுக் குறிப்­பி­லி­ருந்த தொர்­டோஸா என்ற பெயரைத் தெரி­வித்து தான் அடைத்து வைக்­கப்பட்­டுள்ள வீடு ஆறொன்­றுக்கு மேலாக அமைந்த சிவப்பு பாலத்­திற்கு மேலே இருப்ப­தாக பொலி­ஸா­ருக்கு தெரிவித்­துள்ளார்.

இது தொடர்பில் ஸ்லோவாக்­கிய பொலிஸார் ஸ்பெயின் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­த­தை­ய­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையையடுத்து குறிப் பிட்ட வீட்டை முற்றுகையிட்டு அந்தப் பெண்ணை மீட்ட பொலிஸார் கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தானிய பிரஜையை கைது செய்துள்ளனர்.