வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (22) பிற்பகல் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.

யாழ் குடாநாட்டில் வசிக்கும் சுமார் 630,000 மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்திசெய்யும் முகமாக பொறியியலாளர் குகனேஸ்வரராஜாவினால் முன்மொழியப்பட்ட இந்த திட்டம் அமைச்சரவை அங்கீகாரத்தினை பெற்றுள்ளதுடன் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவினால் அடுத்த மாதம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.