(ஆர்.விதுஷா)

கொழும்பு - மெகசின் சிறைச்சாலையில் தடுத்து  வைக்கப்பட்டுள்ள  தமிழ் அரசியல் கைதியொருவரின் உண்ணாவிரதப் போராட்டம்  நாளை செவ்வாய்க்கிழமை 9 ஆவது நாளாகவும் தொடரவுள்ளது.

நெல்லியடியை சேர்ந்த திரைப்பட கூட்டுத்தாபனத்தின்முன்னாள்  பணிப்பாரரான  கணகசபை தேவதாசன் என்ற 62 வயதுடைய தமிழ்  அரசியல் கைதியே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில்   ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக அவரது உடல் நிலை வெகுவாக  பாதிக்கபட்டுள்ளது. இருப்பினும் தனது கோரிக்கைக்கு உடன் தீர்வை  பெற்றுத்தரக்கோரி  தொடர்ந்தும்  உண்ணாவிரத்தை மேற்கொண்டுள்ளார். 

தனக்கான வழக்கு விசாரணைகளின் போது சட்டத்தரணிகள்இன்றி  தாமே வாதிடுவதாகவும் அதனால் போதுமான சாட்சியத்தை திரட்ட  முடியாது போவதால் தனக்கு பிணை வழங்கக்கோரியே  இவ்வாறு  உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.

கோட்டை ரயில் நிலையில் குண்டுவெடிப்பு  சம்பவத்துடன்  தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.