இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எனினும் லசித் மலிங்க எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெவுற்ற சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடர் வரை இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இதேவேளை லசித் மலிங்க பங்களாதேஷ் அணியுடனான இத் தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் குறித்த ஓய்வு தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையிலேயே இன்றைய தினம் மலிங்கவின் ஒருநாள் தொடர் ஓய்வு குறித்து உத்தியோகபூர்வமாக காணொளிப் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார்.

மேலும் அந்தக் காணொளிப் பதிவில் 26 ஆம் திகதி தான் விளையாடும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்க இயலுமானால் ஆர்.பிரேமதாச மைதானத்திற்கு வருமாறும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.