(எம்.எப்.எம்.பஸீர்)

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் தற்போது வரை எத்தனை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறித்து உடனடியாக தமக்கு அறிக்கை தருமாறு சட்ட மா அதிபர் , பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த தொடர் குண்டுத்தககுதலுடன் தொடர்புபட்டுள்ளதாக கூறி கைது செய்யப்பட்டு அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவோர் தொடர்பிலான விசாரணையின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலும் அவ்வறிக்கையில் உள்ளடக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.