அதிசக்திவாய்ந்த மினசார கம்பியிலிருந்து திருட்டுத் தனமாக மின்சாரத்தைப் பெறமுயன்ற சிறுவனொருவன் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியாகியுள்ளார்.

இச் சம்பவம் மொனராகலை, தம்பகல என்ற இடத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

தம்பகலையைச் சேர்ந்த ஏ. ஜீ அமில என்ற 15 வயது நிரம்பிய பாடசாலை சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

அதிசக்திவாய்ந்த மின்சார கம்பியிலிருந்து திருட்டுத் தனமாக வீட்டுக்கு மின்சாரத்தினைப் பெற முயன்றபோது சிறுவன் பொருத்திய கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் பலியாகியதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறுவனின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைகளுக்காக மொனராகலை அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.