இலங்கையினால் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தொடர்பில் சீனா அதிருப்தியடைந்திருப்பதாக தெரிவித்த சீனத் தூதுவர் செங் சீயுவான், அது இலங்கைக்கான சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வருகின்ற சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வருடாந்தம் சுமார் 3 இலட்சத்தை எட்டியிருக்கிறது. இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகளில் அதிகூடிய எண்ணிக்கையானவர்கள் சீனர்களே. ஆனால் தாய்லாந்தினால் கவரப்படும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது  இலங்கைக்கு வந்திருக்கக்கூடிய சீன சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை சொற்பமே. 

எனவே தாய்லாந்து போன்று வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு அவசியமான சௌகரியங்களை வழங்குவதில் இலங்கை கவனத்தைக் குவிக்க வேண்டும். மேலும் மேலும் சீன சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவதில் தற்போது காணப்படும் தடைகளைத் தளர்த்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.