கோதுமை மாவின் விலையை 8.50 ரூபாவினால் அதிகரிப்பது குறித்து வாழ்க்கைச் செலவு குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலொன்றை நாளை மேற்கொள்ளவுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி கோதுமை மாவினை இறக்குமதி செய்யும் பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களானது நுவர்வோர் அதிகார சபையினது அனுமதியை பெறாது கோதுமை மாவின் விலையினை 8 ரூபாவினால் அதிகரித்திருந்தன.

இதனால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினால்  450 கிரேம் நிறையுடைய பாண் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம் மேற்கொண்டு, பின்னர் குறித்த தீர்மானம் தற்காலிகமாக கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே குறித்த கலந்துரையாடல் நாளையதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.