குருணாகல் வைத்தியர் ஷாபி தாக்கல்செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 திகதி ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோமானது என்று உத்தரவிடக்கோரி குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி புவனேகு அலுவிஹார தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாவினால் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இந்நிலையிலேயே வழக்கை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாகவும் பிரதிவாதிகளுக்கு வழக்கு குறித்து அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குருணாகல் வைத்தியரான ஷாபி ஷிஹாப்தீன் மொஹமட் சட்டவிரோத கருத்தடை மற்றும் அறுவை சிகிச்சைகள் , பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு விளக்ககமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.