இந்தியா, சென்னையில் கணவனை துப்பட்டாவால் இறுக்கியும், தலையணையால் முகத்தை அமுக்கியும் கொலை செய்துவிட்டு, மீன் வாங்குவதற்காக சந்தைக்கு சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 சென்னை, கோயம்பேடு நெற்குன்றம் சக்தி நகரைச் சேர்ந்து, கணவருடன் வசித்து வந்தவர் காயத்ரி. இவர் கள்ளக்காதலுக்காக தனது கணவனை கொடூர கொலை செய்துள்ளார். இவரின் கணவர் நாகராஜ். இவரிற்கு வயது 28. முச்சக்கரவண்டி ஓட்டுனரான இவர், நேற்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதாவது நாகராஜின், காது, மூக்கில் இரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.இதுகுறித்து தகவலை அறிந்த  பொலிஸார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். முதல் விசாரணையே நாகராஜ் மனைவி காயத்ரியிடம்தான். "என் புருஷன் தற்கொலை செய்துக்கிட்டார்" என்று போலீசாரிடம் அழுது ஒப்பாரி வைத்தார் காயத்ரி.

இதில் நம்பிக்கையற்ற பொலிஸார், தங்கள் பாணியில் விசாரணை நடத்திய பிறகுதான், காயத்ரி எல்லா உண்மையையும் கூற ஆரம்பித்துள்ளார். "எனக்கும், என் புருஷனின் நண்பர் மகேந்திரனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இது என் புருஷனுக்கு தெரிஞ்சு போயிடுச்சு. அதனால எங்களுக்குள்ள வீட்டில் தகராறு இருந்து வந்தது" என்றார்.

மேலும், கோபத்தில் மகேந்திரனை தீர்த்துகட்ட நினைத்ததாகவும், இந்த விஷயம், மகேந்திரனின் மனைவி பானுக்கு தெரிந்துவிட்டதால், நானும், பானுவும், சேர்ந்தே தன் கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். இந்நிலையில்,வீட்டில் தூங்கி கொண்டிருந்த நாகராஜை தலையணையால் முகத்தை அமுக்கியும், என் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்தோம் எனவும் காயத்ரி ஒப்புக்கொண்டார்.

அத்தோடு, எதுவுமே தெரியாதது போல் மீன் வாங்குவத்கு மீன் சந்தைக்கு சென்று நாடகமாடினேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, காயத்திரியையும்,பானுவையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.