இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளார் திரு ஜோசப் ஸ்ராலினுக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) காலை கொழும்பில் இடம்பெற்றது. 

வடமாகாணத்தில் ஆசிரியர்களின் இடமாற்றங்களின்போது ஏற்படும் கொள்கை ரீதியான  பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அதிபர் சேவைத் தரம் III இல் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

இந்தப் பிரச்சினைகள் குறித்து  ஆராயும் பொருட்டு  கல்வியமைச்சின் செயலாளரின் தலைமையில் மாகாணப் பணிப்பாளர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவொன்றினை நியமிக்கவுள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர் வடமாகாணத்தில் நிலவும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் சுமூகமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.