(க.கிஷாந்தன்)

 

கினிகத்தேனை பகுதியில்  கஞ்சா போதைபொருள் பக்கெட்களுடன் ஒருவரை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கினிகத்தேனை நகர பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் வைத்து குறித்த நபரை திடீரென பரிசோதனைக்குட்படுத்திய போது கஞ்சா பக்கெட் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இவரிடமிருந்து 11 கஞ்சா பக்கெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இதனையடுத்து கைது செய்த சந்தேக நபரை அட்டன் நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.