(ஆர்.விதுஷா)

'நோர்த் சீநிறுவனம்' மீன்பிடி வலைகளை தயாரித்து வழங்கும் அரச  நிறுவனமாகும். அந்த  நிறுவனத்தினால்  தயாரிக்கப்படும்  மீன்பிடி வலைகள்  தரமற்றவையாக காணப்படுவதாக அளிக்கப்பட்டுள்ள  முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளை இன்று திங்கட்கிழமை  ஜனாதிபதி ஆணைக்குழுவில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது அந்த நிறுவனத்தின் முன்னாள் கணக்காளர் லோகநாதன் ஞானவேல் சாட்சியமளிக்கையில் கூறியதாவது,  

'நோர்த் சீ  அரச நிறுவனம் ' மீன்பிடி  வலை உற்பத்தி செய்வதற்காக  ஜப்பானிய  தொழில் நுட்பத்தில்  தயாரிக்கப்பட்ட  நூலினையே பயன்படுத்தப்பட்டது.

 இலங்கையில் அந்த நூலின் ஏக முகவராக  ஜே.பீ. பெர்ணாண்டோ அன்ட் சண் நிறுவனம் செயற்பட்டது. 

2015 இல்  இடம் பெற்ற  ஆட்சி  மாற்றத்தின்  பின்னர் அந்த நிறுவனத்தின்  தலைவராக  எஸ்.ரீ .பரமேஸ்வரன்  நியமிக்கப்பட்டார். அதன்  பின்னர் அவர்   ஜே.பீ. பெர்ணாண்டோ அன்  சண்  நிறுவனத்திடமிருந்தான  கொள்வனவை  நிறுத்தி  இந்தியாவிலிருந்து  நேரடியாக இறக்குமதி  செய்து  வருகின்றார். 

 இவ்வாறு இறக்குமதி செய்யப்படும்  மூலப்பொருட்கள்  தரமற்றவையாகும் .ஆயினும்  உண்மையான  தரத்திற்கு  உரிய  பெறுமதியிலேயே கொள்வனவு  இடம் பெற்றுள்ளது.  

இந்த நிலையில் ,வலைகளை  உற்பத்தி  செய்யும் போது  தரமின்மையின் காரணமாக  உற்பத்தி  கழிவுகள்  அதிகமாவதுடன்,  வலைகள் சிதைவடைகின்றன. இது தொடர்பில்  யாழ்ப்பாணம் தொழிற்சாலை  ஊழியர்கள் எஸ்.ரீ. பரமேஸ்வரனிடத்தில்  முறையிட்டுள்ளனர்.  இருப்பினும்  அவர் அந்த விடயம்  தொடர்பில்  கவனம்  செலுத்தவில்லை.  

இதன் காரணமாக  நோர்த் சீ  நிறுவனத்தின்   தயாரிப்பில்   குறைபாடு  ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பில் மயிலிட்டி ,பருத்தித்துறை மற்றும்  நைனாதீவு மீன்பிடி சங்கங்களை சேர்ந்த மீனவர்களும் பலதடவைகள்  முறையிட்டுள்ளனர். 

2015  இற்கு முன்னர் தாம் கொள்வனவு செய்த வலைகளை 10  அல்லது 15  வருடங்களுக்கு வைத்து பாவிக்கக்கூடியதாக இருந்தது  எனவும் தற்போது கொள்வனவு  செய்யும்  வலைகளை   6  மாத  காலங்களே பாவிக்கக்கூடியதாகவுள்ளதாகவும்   முறையிட்டுள்ளனர்.  மேலும் , இந்த  நிறுவனத்தினால்  வழங்கப்படும் மீன்பிடிவலைகள்  தரமற்றவை  என்பது  இரசாயணப்பகுப்பாய்வின்  ஊடாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவை  தொடர்பில் தகுந்த பதிலை அளிக்க  நோத் சீ நிறுவனம் தவறியுள்ளது. அத்துடன்,  பதவி  நியமனங்களும்  பக்கச்சார்பாகவே  இடம்  பெறுகின்றன.  

யாழ்ப்பாணம் தொழிற்சாலை ஊழியர்களுக்காக பலவருடங்களாக  ஊழியர்  சேமலாப  நிதி  செலுத்தப்படாமலிருந்துள்ளது.  அவை  முழுவதும் செலுத்தப்படவேண்டும் என   யாழ்பாணம் தொழில்  திணைக்களத்தின்  உதவியுடன்  வழக்கு  தாக்கல்  செய்து 34 இலட்சம்  ரூபாவை  அவர்களுக்கு  பெற்றுக்கொடுப்பதற்கான  நடவடிக்கைகளை  மேற்கொண்டேன்.  

அதன்காரணமாக என்னை பதவி நீக்கியுள்ளனர். இது தொடர்பில்  உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தபோது என்னை மீண்டும்  பதவியில்  இணைத்துக்கொள்ளுமாறு  உயர் நீதி  மன்றம்   உத்தரவு  பிறப்பித்தும் அதனையும்  பொருட்படுத்தாமல் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளாதாக முன்னாள் கணக்காளர் லோகநாதன் ஞானவேல்  ஆணைக்குழு முன்னிலையில்  சாட்சியமளித்