பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக 48 வயதான தென்னாபிரிக்காவின் மிக்கி ஆதர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மிக்கி ஆதர்  2005-2010 வரை தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளராகவும் 2011 முதல் 2013 வரை அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக டீன் ஜோன்ஸ், பீட்டர் மூர்ஸ், என ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தாலும்  பின்னர் ஸ்டுவார்ட் லோ அந்த பதவியில் அமர்த்தப்படப் போகிறார் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இறுதியில் மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்ட வாசிம் அக்ரம், ராமிஸ் ராஜா போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கொண்ட குழுவே மிக்கி ஆதரை தலைமை பயிற்றுவிப்பாளராக தேர்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.