லண்டனிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேவ செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தீயை கட்டுப்படுத்த 15 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும் 100 க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படைவீரர்களும் களத்தில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிழக்கு லண்டனில் உள்ள வோல்டாம்ஸ்டோவிலுள்ள பல்பொருள் அங்காடியில் லண்டன் நேரப்படி இன்று காலை 7.40 மணிக்கு குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் மற்றும் காரணம் இதுவரை வெயியிடப்படாத நிலையில் குறித்த பகுதி பெரும் புகை மூட்டமாக காணப்படுகின்றது.