மில்லியன் கணக்கான ஐ ஓஎஸ், ஆண்ட்ரோய்ட் கைத்தொலைபேசி பாவனையாளர்களின் தகவல் தொடர்பாடலில் முதன்மை வகிக்கின்றது.
ஏறக்குறைய ஒரு தாசப்ததிற்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த மென்பொருள் அந்த நேரத்தில் பிரபலமடைந்தது. இதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று வட்ஸ்அப் செயலி, நாளுக்கு நாள் புதுபுது அப்டேட்டுக்களை வழங்கி வருகின்றமையாகும்.
2014 ஆம் ஆண்டில் பேஸ்புக்கின் துணை நிறுவனமான வட்ஸ்அப் செயலி, அதன் மென்பொருளை இன்னும் சிறப்பாக வடிவமைக்க புதிய அம்சங்களை தொடர்ந்து வெளியிடுகிறது.
அந்த வகையில், தற்போது ஓடியோ மெசேஜை, வட்ஸ் அப்பை ஓபன் செய்யாமலே கேட்கும் அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களிலும் கொண்டு வரப்படும். வழக்கமாக மெசேஜ் நோட்டிபிக்கேஷன் எவ்வாறு வருகிறதோ, எவ்வாறு படிக்கிறமோ, அதே போலத் தான் இனி ஓடியோ மெசேஜ் வரும்.
ஓடியோ மெசேஜ் நோட்டிபிக்கேஷனை க்ளிக் செய்தால் போதும். வட்ஸ் அப் ஓபன் ஆகாமலே, அந்த
ஓடியோவை கேட்கலாம். இந்த வசதி வேண்டாம் என்று நினைப்பவர்கள், வட்ஸ் அப் செட்டிங்ஸ் பகுதிக்குள் சென்று மாற்றிக் கொள்ளலாம்.
ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தில் இப்போது குறித்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்களை WABetaInfo என்ற வட்ஸ் அப் அப்டேட்டை கண்காணித்து வரும் இணையதளம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM