கால­நிலை சீராகி வெள்ள அச்­சுறுத்தல் நீங்­கி­னாலும் தொடர் மழை கார­ண­மாக இரத்தின­புரி மாவட்­டத்தின் இரத்­தி­ன­புரி மற்றும் பலாங்­கொடை பிர­தேச செயலக பிரி­வு­களில் மண்­ச­ரிவு ஏற்­படும் அபாயம் நில­வு­வ­தாக இரத்தினபுரி மாவட்ட இடர் முகா­மைத்­துவ நிலையம் அறி­வித்­துள்­ளது.

இவ்­வ­றிவித்தலில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பலாங்­கொடை பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வு­களில் மண்­ச­ரிவு இடம்­பெ­றக்­கூ­டிய பகு­தி­க­ளுக்கு  சிவப்பு அறி­விப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. எனவே மேற்­படி அவ­தான இடங்களில் வசிக்கும் பொது­மக்கள் பொருத் தமான பாது­காப்பு ஏற்­பா­டு­களை செய்து கொள்வது அவ­சியம். 

அதற்­கென கட்­டிட ஆராய்ச்சி நிறு­வனம் மண்­ச­ரிவு ஏற்­ப­டக்­கூ­டிய  இடங்­களில்  அடையாளங்­க­ளையும் வெளி­யிட்­டுள்­ளது. 

இதற்­கி­ணங்க நிலத்தில்  வெடிப்புக்கள், நிலத்­தா­ழி­றக்கம், நிலத்தில் குழிகள் ஏற்­ப­டுதல், மரங்கள் செடி­கொ­டிகள் சாய்தல், மேலும் மின் மற்றும் தொலை பேசி தூண்கள் சரிவு, சுவர்கள் நிலம் ஆகி­ய­வற்றில் வெடிப்புக்கள் ஏற்­ப­டுதல், அவை விரி­வ­டைதல் ,புதிய நீரூற்­றுக்கள் உரு­வா­குதல், பழைய நீரூற்­றுக்­களில் நீர் திடீ­ரென வற்­றுதல் அல்­லது இவற்­றி­லி­ருந்து கலங்­க­லான நீர் வெளி­யே­றுதல் போன்ற அடை­யா­ளங்கள் மண்­ச­ரி­வுகள் ஏற்படு­வ­தற்­கான அறி­கு­றி­க­ளாகும். 

எனவே இவ்வாறான அடையாளங்கள் தென்பட்டால் உடனடியாக துறைசார் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அறிவுறுத்த வேண்டும்.அதே நேரம் உடனடியாக அவ்விடங்களை விட்டு வெளியேறுமாரும்  பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.