பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் நிலையத்தின் ஆயுத களஞ்சியத்திலிருந்த இரு  ரீ-56 ரக துப்பாக்கிகள் காணாமல்போன விவகாரம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணை காரணமாகவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர், பெண் சார்ஜண்ட்  உட்பட 8 கான்ஸ்டபிள்களே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த 06 ஆம் திகதி குறித்த பொலிஸ் நிலையத்தின் ஆயுத களஞ்சியத்தில் இருந்த இரு  ரீ -56 ரக துப்பாக்கிகள் காணாமல்போன விவகாரம் தொடர்பாக பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  பிரபாத் பரணவித்தாரன  பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தனவின் கீழ் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.