200 கிலோ மீற்றர் தூரம் பயணித்து தன்னை நிராகரித்த எஜமானியை தேடிச் சென்ற நாய்க்குட்டி

Published By: Digital Desk 3

22 Jul, 2019 | 03:32 PM
image

நாய் குட்டி ஒன்று ரயிலில் இருந்து தப்பிச் சென்று சைபீரிய காடு வழியாக 125 ( 200 கிலோமீற்றர் ) மைல் தூரம் நடந்து ,தன்னை நிராகரித்த தனது உரிமையாளரை தேடி கண்டுபிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிறந்து ஆறு மாதங்களான நாய் குட்டியை அதன் உரிமையாளர்  ஓவ்வாமை காரணமாக நீண்ட காலத்துக்கு தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால்  நாய் குட்டி பிறந்த இடத்திற்கு திருப்பி அனுப்ப முயற்சி செய்தார்.

குறித்த நாய்க்குட்டியை அதன் உரிமையாளர் ரயில் எற்றிச் சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில், ரயிலில் சென்று கொண்டிருந்த போது தனது கால்களை பயன்படுத்தி  ரயில் பெட்டியின் கதவை திறந்து அச்சின்க்ஸ  என்ற இடத்திற்கு அருகில் உள்ள ரயில் நிலையத்தில் நாய்க்குட்டி தப்பி ஓடியுள்ளது.

ரயிலில் பயணித்தவர்கள் ரயில் நடைபாதையில் சென்ற நாய் குட்டியை பார்த்து சத்தமிட்டனர். ஆனால் அது நீண்ட தூரம் சென்று விட்டது.

இதையடுத்து குறித்த நாய்க்குட்டி, இரண்டு நாட்களின் பின்னர் காயங்களுடன் உரிமையாளர் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள தொழிற்சாலை வளாகமொன்றிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்டது. 

நாய்க்குட்டி, உலகின் மிக நீளமான ரயில் பாதையை அதாவது 125 மைல் ( 200 கிலோமீற்றர் ) தூரம்  கடந்து தன் உரிமையாளரின் வீட்டுக்கு சென்றுள்ளது.

நாய்க்குட்டி பயணித்த பாதைகளில் ஓநாய்கள் மற்றும் கரடிகளின் நடமாட்டங்கள் இருந்தபோதும் எவ்வித ஆபத்துமில்லாது மிகவும் அதிர்ஷ்டவசமாக வந்துள்ளது.

நாய்க்குட்டியை மீட்ட போது மிகவும் சோர்வடைந்து, கால்களில் காயங்களுடன் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்த நிலையில் இருந்தது. பின்பு காயங்களக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right